Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுஜாதாவை சினிமா உலகம் பயன்படுத்திக் கொள்ளவில்லை - சிவகுமார்!

Advertiesment
சுஜாதாவை சினிமா உலகம் பயன்படுத்திக் கொள்ளவில்லை - சிவகுமார்!
, திங்கள், 3 மார்ச் 2008 (13:15 IST)
webdunia photoFILE
சென்னை நாரதகான சபாவில் மறைந்த எழுத்தாளர் சுஜதாவுக்கு அஞ்சலி கூட்டம் நடந்தது. உயிர்மை இதழின் ஆசிரியரும் எழுத்தாளருமான மனுஷ்யபுத்ரன் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

நடிகர்கள் கமல்ஹாசன், சத்யராஜ், பார்த்திபன், சிவகுமார், கவிஞர் வைரமுத்து, இயக்குனர் வசந்த், எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், ரா.கி. ரங்கராஜன், இந்திரா பார்த்தசாரதி, சாருநிவேதிதா, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கமல்ஹாசன் தனக்கும், சுஜாதாவுக்கும் உள்ள உறவை, அவர் 'மருதநாயகம்' படத்தில் தனது பெயரை போட வேண்டாம் என்று கூறிய நிகழ்வை நினைவு கூர்ந்தார்.

சுஜாதாவை நாடக உலகு பயன்படுத்திக் கொண்ட அளவு, சினிமா உலகம் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றார் சிவகுமார்.

சுஜாதாவின் இரு மகன்களிடமும் சுஜாதாவின் ஓவியத்தை நடிகர் கமல்ஹாசனும், வைரமுத்துவும் அளித்தனர்.

கூட்டத்தில் பேசிய அனைவரும் சுஜாதாவை நேரடியாக அறிந்தவர்கள், அவரோடு பழகியவர்கள். அதனால் இழப்பின் சோகமும், அன்பின் நெகிழ்ச்சியும் அனைவருடைய பேச்சிலும் இழையோடியது. முத்தாய்ப்பாக, இனியாவது கலைஞர்களை வாழும் போதாவது வாழ்த்துவோம் என்றார் வைரமுத்து.

Share this Story:

Follow Webdunia tamil