Publish Date: Sat, 01 Mar 2008 (20:01 IST)
Updated Date: Sat, 01 Mar 2008 (20:01 IST)
ரஜினி நடிக்கும் குசேலன் படத்தை தயாரிக்கும் பாலசந்தரின் கவிதாலயாவின் அடுத்த தயாரிப்பு கிருஷ்ண லீலை!
சூரி படத்தை இயக்கிய ஸெல்வன், கவிதாலயாவுக்கு கதை சொல்லியிருந்தார். அருமையான கதை, கண்டிப்பாக தயாரிக்கலாம் என உறுதி கூறியது கவிதாலயா. இது குசேலன் படம் குறித்தப் பேச்சு தொடங்குவதற்கு முன்பு நடந்தது.
குசேலன் பட வேலைகளில் பிஸியாக இருக்கும் கவிதாலயா அப்படியே ஸெல்வன் படத்தின் வேலைகளிலும் கவனம் செலுத்துகிறது. இந்தப் படத்தில் நடிக்க ஜீவன் ஒப்பந்தமாகியிருக்கிறார். படத்துக்கு கிருஷ்ண லீலை என்று பெயர் வைத்துள்ளனர்.
பெயருக்கு ஏற்ற நடிகரைத்தான் கவிதாலயா தேர்ந்தெடுத்திருக்கிறது.