சென்னை விமான நிலையத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் அரசாங்கம் படப்பிடிப்பை நடத்துகிறார் இயக்குனர் மாதேஷ்!
கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் அரசாங்கம் படத்தில் சர்வதேச குற்றவாளிகளுடன மோதும் உயர் போலீஸ் அதிகாரியாக விஜயகாந்த் நடிக்கிறார். அவரது மனைவியாக நடிப்பவர் நவ்நீத் கவுர்.
அரசாங்கத்தின் முக்கிய காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டன. விஜயகாந்த் நவ்நீத் கவுர், ராகுல்மேனன் இடம்பெறும் விமான நிலைய காட்சி மட்டுமே எடுக்கப்பட வேண்டும். இதற்கு சென்னை விமான நிலையத்தில் அனுமதி மனுக்கப்பட, மும்பை விமான நிலையத்தில் குறிப்பிட்ட காட்சி படமாக்கப்படுகிறது.
விஜயகாந்த், நவ்நீத் கவுர், ராகுல் மேனன் கலந்துகொள்கிறார்கள். இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் படப்பிடிப்பு நடக்கிறது. இதற்காக வாடகையுடன் பெருந்தொகை முன்பணமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.