கேரளாவிலிருந்து தமிழுக்கு வரும் நடிகைகளில் புதுவரவு பாமா! ஷாஜிகைலாஷ் இயக்கும் 'எல்லாம் அவன் செயல்' படத்தில் நடித்து வருகிறார்.
படம் வெளிவரும் முன்பே பாமாவின் புகைப்படத்தைப் பார்த்து நாலா திசைகளிலிருந்தும் விசாரிப்புகள். சேவல் படத்தில் பரத் ஜோடியாக நடிக்கக் கேட்டு, பாடல் காட்சிகளில் கிளாமராக நடிக்க வேண்டும் என்பதற்காக, அந்த வாய்ப்பை உதறியிருக்கிறார் பாமா.
காஸ்ட்யூம் விஷயத்தில் கறாராக இருக்கும் பாமா, பூபதி பாண்டியன் தயாரித்து இயக்கும் 'நானும் என் சந்தியாவும்' படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். பூபதி பாண்டியனின் தம்பி ஹீரோவாக அறிமுகமாகும் இந்தப் படத்தில் பாமாவுக்கு ஹோம்லி வேடமாம்.
கோலிவுட்டின் கிளாமர் தேவையை எத்தனை நாளைக்கு பாமா தாக்குப் பிடிக்கிறார் என பார்ப்போம்!