கமலின் பத்துவிதமான கெட்டபுகளை முதலில் பார்த்தவர் ரஜினிகாந்த். ஏவி.எம். ஸ்டுடியோவில் கமல் நடிப்பது தெரிந்து, நேரில் சென்று அவரைப் பார்த்தவர் ரஜினி. அந்த சந்திப்பில் தனது கெட்டப்புகளை ரஜினியிடம் காட்டினார் கமல்.
பிறகு, தமிழக முதல்வரை நேரில் சந்தித்து தனது பத்து கெட்டப்புகளின் புகைப்படங்களை காண்பித்தார் கமல். ஜாக்சி சானுக்கும் கமலின் தசாவதாரம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. பின்னணி இசை சேர்க்க வந்த தேவி ஸ்ரீபிரசாத்தும் கமலின் பந்துவிதமான வேடங்களைப் பார்த்து பரவசமானார்.
சில நாட்கள் முன்பு ஏவி.எம். ஸ்டுடியோவில் உள்ள ஏசி திரையரங்கில் கமல் பிரத்யேகமாக ஒருவருக்கு படத்தை திரையிட்டுக் காண்பித்தார். அவர் கமலின் மகள் ஸ்ருதி.
தந்தையின் பத்து அவதாரங்களைப் பார்த்து பரவசமானவர், பெருமையுடன் தந்தையைப் பாராட்டியிருக்கிறார்.
எல்லாம் சரி, படத்தை எப்போது வெளியிடடப் போகிறறீர்கள்?