விக்ரமுடன் கந்தசாமி, தனுஷ¤டன் பெயரிடப்படாதப் படம். இவை தவிர தற்போது ஸ்ரேயா கையில் வேறு தமிழ்ப் படங்களில்லை. அஜித்தும், விஜயும் நயன்தாராவை தங்கள் அடுத்தப் படத்தில் ஜோடியாக்கி விட்டனர். மீதம் இருப்பவர் சூர்யா. அவரும் கைவிட்டால்...?
நிலைமை உணர்ந்து தன்னை வளர்த்து ஆளாக்கிய தெலுங்குப் பக்கம் கவனம் திருப்பியிருக்கிறார் ஸ்ரேயா. அத்துடன் ஒரு பெரிய படத்தின் வாய்ப்பும் ஸ்ரேயாவுக்கு வந்துள்ளது.
ஃபயர் படத்தின் மூலம் பரபரப்பாக பேசப்பட்ட தீபா மேத்தா, புதிய பட வேலையை தொடங்கியிருக்கிறார். அதில் நடிக்க ஸ்ரேயாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
தெலுங்கில் ரம்யா கிருஷ்ணனின் கணவர் கிருஷ்ணவம்சி இயக்கும் படத்தில் நடிக்கவும் ஸ்ரேயாவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டுள்ளது.