Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் ஜோடியானார் நயன்தாரா!

Advertiesment
விஜய் ஜோடியானார் நயன்தாரா!
, வியாழன், 28 பிப்ரவரி 2008 (20:12 IST)
'குருவி'யில் முதலில் ஒப்பந்தமானவர் நயன்தாரா. பிறகு என்ன நடந்ததோ... த்ரிஷா மேஜிக், நயன்தாராவை படத்தை விட்டே தூக்கி எறிந்தது!

குருவிக்குப் பிறகு ஐங்கரன் இன்டர்நேஷனல் தயாரிப்பில் பிரபுதேவா இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய். இதில் விஜய் ஜோடியாக இலியானாவை எப்படியும் இழுத்துப் போடுவது என தலைகீழாக நின்று பார்த்தார் பிரபுதேவா. இலியானா கழுவுற மீனில் நழுவுற மீன். கடைசி வரை பிரபுதேவாவின் கையில் சிக்கவில்லை.

இதனால் குருவியில் நடிக்க முடியாமல் போன நயன்தாராவுக்கு வாய்ப்பு கொடுத்தள்ளனர். விஜயுடன் ஜோடியாக இது முதல் என்றாலும், சிவகாசியில் விஜயுடன் ஆடிய அனுபவம் நயன்தாராவுக்கு இருக்கிறது.

ராஜு சுந்தரம் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ஏகனிலும் நயன்தாராதான் ஜோடி. இதனால் ஓவர்நைட்டில் தாராவின் க்ராப் தாறுமாறாக எகிறியிருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil