Publish Date: Thu, 28 Feb 2008 (20:21 IST)
Updated Date: Thu, 28 Feb 2008 (20:21 IST)
இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது விக்ரமின் நெடுநாளைய ஆசை. அதற்கான காலம் கனிந்திருக்கிறது.
அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் நடிக்கும் பட வேலையில் தீவிரமாக இருக்கிறார் மணிரத்னம். இந்தப் படத்துக்குப் பிறகு அவர் இயக்கும் படத்தில் விக்ரம் நடிப்பார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
கந்தசாமியில் நடித்துவரும் விக்ரம், அடுத்து மோகன் நடராஜனின் ஸ்ரீராஜகாளி அம்மன் சூப்பர் மீடியாவுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார். அனேகமாக இந்தப் படத்தை கே.எஸ். ரவிகுமார் இயக்குவார் என தெரிகிறது.
இது தவிர யு.டி.வி. தயாரிப்பில் அமீர் இயக்கும் படத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.