Publish Date: Tue, 26 Feb 2008 (19:37 IST)
Updated Date: Tue, 26 Feb 2008 (19:37 IST)
ராசியான ஜோடி என்ற பெயர் ஷாம் - சினேகாவுக்கு கிடைக்குமா? 'ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே படத்தில் தொடங்கி இன்பா வரை இந்த ஜோடி பல படங்களில் ஒன்றாக நடித்திருக்கிறது. ஷாம் சொன்னதால் இன்பாவில் சினேகா கிளாமராக நடித்திருக்கிறார் என்றொரு கிசுகிசு கூட இந்த ஜோடியைப் பற்றி உண்டு.
இந்நிலையில் மீண்டும் இவர்கள் இணைகிறார்கள். இயக்குனர் சஞ்சய்ராமின் சிவமயம் படத்தில் ஷாம், பிரகாஷ்ராஜ் நடிக்க உள்ளனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் இப்படத்தில் ஷாம் ஜோடியாக நடிக்க சினேகாவிடம் கால்ஷீட் கேட்கப்பட, அவரும் நடிக்க ஒப்புக் கொண்டதாக சஞ்சய்ராம் கூறினார்.
இந்தப் படத்தை சஞ்சய்ராமின் லிங்கம் தியேட்டர்ஸ் தயாரிக்கிறது.