நடித்தது போதும், எப்போது படம் இயக்குவார் என்று ரசிகர்களே எதிர்பார்க்கிறார்கள். எதிர்பார்ப்பை விரைவில் நிறைவேற்றுகிறார் சேரன்.
ஜெகன்ஜி இயக்கத்தில் ஐந்து ஹீரோயின்களுடன் ராமன் தேடிய சீதையில் நடித்துவரும் சேரன், அடுத்து நேமிசந்த் ஜெபக் நிறுவனத்துக்காக பொக்கிஷம் படத்தை இயக்குகிறார்.
மாயக்கண்ணாடியில் தவறிப்போன சேரன் 'டச்'சை பொக்கிஷத்தில் எதிர்பார்க்கலாம். ஹீரோவுக்காக வெளியே ஆள்தேடுவானேன் என்று சேரனே ஹீரோவாகிவிட்டார். அதனால் ஹீரோயினை மட்டும் தேடினால் போதும்.
அனேகமாக அவர் சினேகாவாக இருப்பார் என்கிறார்கள்!