Publish Date: Mon, 25 Feb 2008 (19:04 IST)
Updated Date: Mon, 25 Feb 2008 (19:04 IST)
பருத்திவீரன் படம் முடிந்ததும் முதல்வர் கருணாநிதிக்கு திரையிட்டு காட்டினார் அமீர். படத்தைப் பார்த்த முதல்வர், ஒரு கோபுரத்தில் அமர்ந்து ஒரு கிராமத்தை நேரில் பார்த்த அனுபவம் போலுள்ளது என்று பாராட்டியதுடன், கிளைமாக்ஸ் இப்படி எடுத்து நாலு நாட்கள் தூங்க முடியாமல் செய்துவீட்டீர்களே என்றும் புகழ்ந்தார்.
பெர்லின் திரைப்பட விழாவில் அமீருக்கு விருது கிடைத்ததை அறிந்த முதல்வர் அமீரை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார்.
கலைஞர் என்ற பெயர் முதல்வருக்கு நூறு சதம் பொருத்தமானதுதான்!