Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சோனி மியூசிக்கில் யுவன்!

Advertiesment
சோனி மியூசிக்கில் யுவன்!
, சனி, 23 பிப்ரவரி 2008 (19:30 IST)
சோனி பிஜிஎம் நிறுவனம் தசாவதாரம் படத்தின் இசையை வெளியிடுவதன் மூலம், தமிழ் சினிமா வர்த்தகத்தில் நுழைந்துள்ளது. இந்திப் படங்களின் இசை, இந்தி பாப் ஆல்பங்கள் ஆகியவற்றை சோனி ஏற்கனவே வெளியிட்டிருக்கிறது.

ஏ.ஆர். ரஹ்மானின் வந்தே மாதரம் ஆல்பத்தையும் சோனி நிறுவனமே வெளியிட்டது. இந்தி பாப் ஆல்பங்களைப் போல, தமிழ் பாப் ஆல்பங்களையும் வெளியிட சோனி முடிவு செய்துள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம் அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது.

சோனியின் முதல் வெளியீடாக விரைவில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை ஆல்பம் வெளிவருகிறது. ஆல்பத்துக்கான இசைக்காக சமீபத்தில் வெளிநாடு சென்றிருந்தார் யுவன்.

இந்த இசை ஆல்பம், தமிழ் பாப் ஆல்பங்களுக்கான வரவேற்பை அதிகப்படுத்தும் என இசை ஆர்வலர்கள் நம்புகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil