பெயர் மாற்றுவது நடிகைகளின் பொழுதுபோக்கு. ஒரு படத்தில் நடித்து, அது ஹிட்டாகாமல் போனால், புதுப்பெயரில் புதுகம் போன்ற கோதாவில் வேறுபடம் நடிக்கும் ஜெகஜ்ஜால நடிகைகள் நிறைய.
ஸ்ரேயாவுக்கு அப்படி எந்த நெருக்கடியும் இல்லை. திடீரென்று தனது பெயருடன் சரண் என்ற வாலையும் சேர்த்துக்கெள்ள சொல்லியிருக்கிறார்.
யார் இநத் சரண்?
ஸ்ரேயாவின் அப்பா! சிவாஜி நடிகைக்கு டாடி மீது அவ்வளவு பாசமா?
அதெல்லாம் இல்லை. நியூமராலஜி படி, அப்பா பெயரைச் சேர்த்தால் நல்லது என்று ஜோஸியர் சொல்லியிருக்கிறார். அதுதான் இந்த திடீர் மாற்றம் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.
வாழ்க நியூமராலஜி!