'நேற்று திருமணமான
கூர்காவுக்கு
இன்று முதல் பகல்'
தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம. நாராயணன் சொன்ன இந்த ஹைகூ கவிதைக்கு ஏக கைதட்டல். சொன்ன இடம், நேபாளி பாடல் வெளியீட்டு விழா நடந்த சத்யம் திரையரங்கு.
தானொரு குத்துப்பாடல் ஸ்பெஷலிஸ்ட் என்பதை ஒத்துக்கொண்டார் ஸ்ரீகாந்த் தேவா. அதே நேரம் மாடர்ன் இசையும், மெலடியும் தனக்குத் தெரியும் என்பதை நேபாளி நிரூபிக்கும் என்றார். உண்மை! நேபாளியிலிருந்து திரையிட்டு காண்பித்த பாடல்களும், காட்சிகளும் கொள்ளை அழகு.
சின்ன தளபதி பட்டத்தை துறந்து தளபதியாகலாம் பரத் என்ற கமெண்டுடன் கூட்டத்தை கலகலப்பாக்கினார் பார்த்திபன்.
நேபாளியின் தயாரிப்பாளர் OTS ஃபிலிம்ஸ் ராம. சரவணன். இதற்குமுன் ஏபிசிடி படத்தை தயாரித்தவர். அதனால் ஏபிசிடி இயக்குனர் ஷரவண சுப்பையாவையும் விழாவில் பார்க்க முடிந்தது.
பாடல்களை ராம. நாராயணன் வெளியிட, சட்டசபை துணை சபாநாயகர் துரைசாமி பெற்றுக் கொண்டார்.