கருணாஸ், ஸ்ரீகாந்த், ஆரியா... இவர்களெல்லாம் விநியோகஸ்தரர்களாகி கையை சுட்டுக் கொண்டவர்கள். இதில் கடைசியாக விஷால்!
மேலே சொன்னவர்கள் தங்களுடைய படங்களைத்தான் வாங்கி விநியோகித்தார்கள். விஷால் வாங்கியிருப்பது அஞ்சாதே படத்தை!
அஞ்சாதே படத்தின் கோயம்புத்தூர் விநியோக உரிமையை வாங்கியிரு'க்கிறார் விஷால். அஞ்சாதேக்கும் இந்த ஆளடி உயர ஹீரோவுக்கும் என்ன சம்பந்தம்?
அஞ்சாதேயை இயக்கிய மிஷ்கினின் அடுத்தப் படத்தல் விஷால் நடிக்கிறார். அதற்குதான் இந்த வெள்ளோட்டம்!
பிழைக்கத் தெரிந்த பிள்ளை!