உன்னை நினைத்து படத்தை உரிமை வாங்காமலே கன்னடத்தில் காப்பி அடித்த வருத்தத்தில் இருக்கிறார் விக்ரமன். புகார் கொடுத்த பின்பும் சொற்ப பணமே நஷ்ட ஈடாக விக்ரமனுக்கு கிடைத்துள்ளது.
அந்த வருத்தத்தை ஓரமாக ஒதுக்கி வைத்து, தனது புதிய பட வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
விஜயகாந்த், விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களை இயக்கியவர் முற்றிலும் புதுமுகங்களை வைத்து ஒரு படம் இயக்குகிறார். பூவே உனக்காக மாதிரி வித்தியாசமான காதல் கதையிது என்பவர், ஏப்ரலில் படப்பிடிப்பை தொடங்குகிறார்.
படத்தின் பெயரை முடிவு செய்தபின் படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார் விக்ரமன்.