சிம்ரன் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கிறார்! ஒன்றல்ல இரண்டு படங்களில்.
சம்பளத்தை குறைக்க மாட்டேன், சோலோ ஹீரோயினாகவே நடிப்பேன் என்று கதைக்கு உதவாத கண்டிஷன்களால் கோடம்பாக்கம் சிம்ரனை கண்டுகொள்ளவில்லை.
தற்போது சிம்ரன் தனது நிபந்தனைகளிலிருந்து இறங்கி வந்ததால், தமிழ் சினிமாவும் அவர் பக்கம் நெருங்கி வந்துள்ளது.
குஷ்பு தனது அவ்னி சினி கிரியேஷன் சார்பில் சுந்தர் சி. நடிக்கும் ஐந்தாம்படை படத்தை தயாரிக்கிறார். வீராப்பு பத்ரி இயக்கும் இந்தப் படத்தில் முக்கியமான வேடம் ஒன்றில் சிம்ரன் நடிக்கிறார். சுந்தர் சி-க்கு ஜோடி ஒரு புதுமுகம்.
விநியோகஸ்தர் ஜின்னா பரத்தை வைத்து தயாரிக்கும் சேவல் படத்தில் நடிக்கவும் சிம்ரன் சம்மதம் தெரிவித்ததாக தகவல்கள் வருகின்றன. சேவலை ஹரி இயக்குகிறார்.
குசேலனை தவறவிட்ட சிம்ரனுக்கு ஐந்தாம் படையும், சேவலும் ஆறுதல் பரிசுகள்!