Publish Date: Wed, 20 Feb 2008 (20:20 IST)
Updated Date: Wed, 20 Feb 2008 (20:20 IST)
சின்னத்திரை ரசிகர்களுக்கு நாகா அறிமுகமான பெயர். மர்ம தேசம் திகில் தொடர் மூலம் கிலி ஏற்படுத்தியவர்¨. விடாது கருப்பு, இயந்திரப் பறவை என தொலைக்காட்சியில் கலக்கிக் கொண்டிருந்த நாகா, வெள்ளித்திரைக்கு விரைவில் வருகிறார்.
அறை எண் 305-ல் கடவுள் படத்தை தயாரிக்கும் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் மூன்று புதிய படங்களை தயாரிக்கிறது. ஒரு படத்தை ஷங்கரின் உதவியாளர் அறிவழகன் இயக்குகிறார். இன்னொரு படத்தை தாமிரா இயக்குகிறார். மூன்றாவது படத்தை இயக்குகிறவர் நாகா.
படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. கதை விவாதம் தீவிரமாக நடந்து வருகிறது. மர்ம தேசம் போல் இதுவும் திகில் படமாக இருக்கும் என்கிறது ஷங்கர் அலுவலக வட்டாரம்.