சேலைக்கு மட்டுமே லாயக்கு என்று பத்மப்ரியாவை கட்டம் கட்டியதில் அவருக்கு கோபம். கிளாமரும் எனக்கு வரும் என்று சேலையை தூக்கியெறிந்து மாடர்ன் உடைக்கு மாறியிருக்கிறார்.
அர்ஜுன் ஜோடியாக துரை படத்தில் நடிக்கும் பத்மப்ரியா, இந்திப் படமொன்றில் பார் கேர்ளாக நடிக்கிறார். இவரது ஜோடி சித்தார்த்.
இந்தப் படம் வந்தால் தனது சேலை இமேஜ் தானாக விலகிவிடும் என்றார் பத்மப்ரியா. அந்தளவுக்கு கிளாமராக நடித்திருக்கிறாராம்.
இவருக்கு ஒரு வருத்தம். தமிழில் நடிக்க மறுகிறார் என இவரைப் பற்றி வீண் வதந்தி நிலவுகிறதாம். உண்மையில் தமிழில் நடிக்க துரை நாயகி ஆர்வமாக இருக்கிறாராம்.