Entertainment Film Featuresorarticles 0802 20 1080220062_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிழல் நடத்தும் குறும்பட பயிற்சி‌‌ப் பட்டறை!

Advertiesment
நிழல் குறும்பட பயிற்சி‌‌ப் பட்டறை
, புதன், 20 பிப்ரவரி 2008 (20:09 IST)
நிழல் திரைப்பட இயக்கம் தமிழகம் முழுவதும் குறும்பட பயிற்சிப் பட்டறைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்தப் பயிற்சி பட்டறையில் கேமரா, திரைக்கதை, படத்தொகுப்பு, நடிப்பு ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.

பட்டறையில் கலந்து கொள்பவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு பயிற்சியின் இறுதி நாள் ஒவ்வொரு குழுவும் குறும்படம் இயக்க வாய்ப்பு தரப்படும்.

புகழ்பெற்ற திரைப்படங்கள் பயிற்சிப் பட்டறையில் திரையிடப்பட்டு அதன் மீது விவாதம் நடைபெறும். ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் கலைஞர்கள் தங்கள் துறை குறித்து பேசவும், அவர்களுடன் கலந்துரையாடவும் வாய்ப்பு அளிக்கப்படும்.

அமீர், பாலாஜி சக்திவேல், ஜகன்நாதன் போன்ற இயக்குநர்கள் நிழல் நடத்திய பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு மாணவர்களிடையே பேசியிருக்கிறார்கள்.

வருகிற மார்ச் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை நிழல், பதியம் திரைப்பட இயக்கத்துடன் இணைந்து ராமநாதபுரத்தில் குறும்பட பயிற்சி பட்டறையை நடத்துகிறது. வழக்கம்போல் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களும், ஒளிப்பதிவாளர்களும் கலந்துகொண்டு மாணவர்களிடையே தங்கள் துறை குறித்துப் பேசுகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil