Publish Date: Wed, 20 Feb 2008 (20:07 IST)
Updated Date: Wed, 20 Feb 2008 (20:06 IST)
இனி படங்களை இயக்கமாட்டாரோ என நினைக்கும் அளவுக்கு நடிப்பில் பிஸியாகிவிட்டார் சேரன். ராமன் தேடிய சீதையில் நடிப்பவர், மேலும் சில படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார்.
நடிப்புடன் தனது ஆட்டோகிராஃப் படத்தின் இரண்டாம் பாகத்தை கொண்டு வருவதிலும் சேரன் தீவிரமாகயிருக்கிறார். இரண்டாம் பாகத்திற்கு தீராத காதல் என பெயர் வைத்துள்ளார். பெயர் இன்னும் சேம்பரில் பதிவு செய்யப்படவில்லை.
ஆட்டோகிராஃபில் நடித்தவர்களே தீராத காதலிலும் நடிக்கின்றனர். அவர்களை ஒன்றிணைப்பதுதான் சேரனுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால்.