Publish Date: Tue, 19 Feb 2008 (12:35 IST)
Updated Date: Tue, 19 Feb 2008 (12:35 IST)
ரமணா நடிக்கும் படத்துக்கு பல கோடி செலவு செய்ய தன்னம்பிக்கை நிறைய தேவை. அஜந்தா தயாரிப்பாளர் ராஜ்பா ரவிசங்கருக்கு அது நிறையவே இருக்கிறது.
அஜந்தாவை தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், கன்னடம் என அனைத்துத் தென்னிந்திய மொழிகளிலும் தயாரித்து வெளியிடுகிறார். படத்தின் கதையை விட இவர் இளையராஜாவின் இசையைத் தான் அதிகம் நம்பியிருக்கிறார்.
அதற்கேற்ப இளையராஜாவும் எட்டுப் பாடல்களுக்கும், ஒரு கீர்த்தனைக்கும் இசையமைத்துள்ளார். நான்கு மொழிகளிலும் சேர்த்து மொத்தம் 36 பாடல்கள். ''மனசுக்கு ரொம்பவும் பிடித்து இசையமைத்தேன்'' என்று இளையராஜாவையே நெகிழ வைத்துள்ளது அஜந்தா.
படத்தின் முதல் இருவார வசூலில், ஒரு டிக்கெட்டுக்கு இரண்டு ரூபாய் வீதம் அனாதை இல்லங்களுக்கு அளிக்கப் போகிறாராம் ராஜ்பா ரவிசங்கர்.