தசாவதாரம் படத்தின் ஆடியோ வெளியீட்டுத் தேதி முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அடுத்த மாதம் 14 ஆம் தேதி, நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் நடிகர் ஜாக்கிசான் ஆடியோவை வெளியிடுகிறார்.
ஹாங்காங் சென்று ஜாக்கிசானைச் சந்தித்த பிறகு இத்தேதியை முடிவு செய்துள்ளார் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன். ஜாக்கிசானுடன், பிரபல இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழி நட்சத்திரங்கள் விழாவில் கலந்து கொள்கின்றனர்.
ஆடியோ சி.டி. மற்றும் கேசட்டுகளை சோனி நிறுவனம் வெளியிடுகிறது.