ஆர்.பி.செளத்ரி தயாரிப்பில் விஜய் நடித்த முதல் படம் 'பூவே உனக்காக' படம் சூப்பர் ஹிட். லவ் டூடே, துள்ளாத மனம் துள்ளும் படங்களும் கூட மிகப் பெரிய வெற்றி பெற்றன.
இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைகிறது. படத் தயாரிப்பிலிருந்து தற்காலிகமாக விலகியிருந்த செளத்ரி, விஜய் படத்தை தயாரித்து மீண்டும் தயாரிப்புத் தொழிலில் முழுதாக ஈடுபட இருக்கிறார்.
குருவி படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்து ஜங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். பிரபுதேவா படத்தை இயக்குகிறார். இசை தேவி ஸ்ரீ பிரசாத், விஜய் ஜோடியாக நடிக்க இலியானாவிடம் தேதி கேட்டுள்ளார்.
இந்தப் படம் முடிந்ததும் செளத்ரி தயாரிப்பில் நடிக்கிறார் விஜய். கதை, இயக்குனர் இன்னும் முடிவாகவில்லை. விஜய், செளத்ரி தயாரிப்பில் நடிப்பது தெரிந்த அறிமுக இயக்குனர்கள் கதை சொல்ல செளத்ரி அலுவலத்திற்கு படையெடுக்கிறார்கள்.