Publish Date: Sat, 16 Feb 2008 (19:16 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:54 IST)
சாதாரண விஷயத்திற்கெல்லாம் சூப்பர் ஸ்டாருக்கு கோபம் வராது. ஆனால், பி. வாசு இயக்கத்தில் நடிக்க இருக்கும் குசேலன் அவரது கோபத்திற்கு ஆளாகியிருக்கிறது.
கதபறயும் போள் படத்தை ரஜினி பார்த்தது முதல் அதில் கெஸ்ட் ரோலில் தோன்றினால் போதும் என அவர் முடிவு செய்தது வரை அனைத்துச் செய்திகளும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்பே பத்திரிக்கைகளில் அச்சேறிவிடுகின்றன.
இதில் கோபமான ரஜினி இதுபற்றி தனது அதிருப்தியை பி. வாசுவிடமே தெரிவிக்க, தனது யூனிட்டை லெப்ட் அண்ட் ரைட் வாங்கியிருக்கிறார் வாசு.
குசேலனின் கதவுகள் இறுக சாத்தப்பட்டுவிட்டதால் அது பற்றிய தகவல்கள் இனி மீடியாக்களுக்கு கசிய வாய்ப்பில்லை. நிருபர்களுக்கு இதுவொரு சோக செய்திதான்!