கலைத் துறையினருக்கு ஆந்திர அரசு ஒவ்வொரு வருடமும் நந்தி விருது அளித்து வருகிறது.
தமிழிலிருந்து தெலுங்கிற்கு நடிக்கச் சென்ற த்ரிஷா ஏற்கனவே இந்த விருதை பெற்றுள்ளார். இந்த வருடம் நந்தி விருது பெறும் இன்னொரு பிரபலம் ஏ.ஆர். முருகதாஸ்.
சிரஞ்சீவி, த்ரிஷா நடிப்பில் இயக்கிய ஸ்டாலின் படத்துக்காக ஏ.ஆர். முருகதாஸுக்கு சென்ற வருடத்திற்கான சிறந்த இயக்குனருக்கான நந்தி விருது வழங்கப்படுகிறது.
முருகதாஸின் ரமணா, கஜினி படங்கள் தமிழக அரசின் விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. ஸ்டாலின் முருகதாஸுக்கு கிடைக்கும் ஹாட்ரிக் விருது!