Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இரட்டை வேடத்தில் கார்த்தி!

Advertiesment
இரட்டை வேடத்தில் கார்த்தி!
, சனி, 16 பிப்ரவரி 2008 (19:14 IST)
webdunia photoWD
ராஜமவுலி இயக்கத்தில் ரவிதேஜா நடித்த தெலுங்குப் படம் விக்ரமார்குடு. ஆந்திராவில் வசூலை வாரிக் குவித்த இந்தப் படத்தின் தமிழ் ரீ-மேக் உரிமையை ஸ்டுடியோ ஸ்கிரீன் வாங்கியுள்ளது.

பருத்தி வீரன் படத்தை தயாரித்த ஸ்டுடியோ ஸ்கிரீன் கார்த்தியை வைத்து விக்ரமார்குடுவின் தமிழ் ரீ-மேக்கை தயாரிக்கிறது.

செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவனில் நடித்து வரும் கார்த்தி அடுத்து லிங்குசாமியின் இயக்கத்தில் நடிக்கிறார். அதற்கு அடுத்து ஸ்டுடியோ ஸ்கிரீனுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார்.

இந்தப் படத்தில் முதன் முறையாக கார்த்தி இரட்டை வேடட்ததில் தோன்றுகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil