சித்திரம் பேசுதடியில் கவனத்தை ஈர்த்த மிஷ்கின் அஞ்சாதேயில் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.
நேற்று வெளியான அஞ்சாதேயின் உறுத்தலான அம்சம் அதன் நீளம். சுமார் 3 மணி நேரம் ஓடுகிறது படம். படம் பார்த்த விமர்சகர்கள், நிருபர்கள் படத்தின் நீளம் அதிகம் என்ற தங்கள் கருத்தை மிஷ்கினிடமே நேரடியாக தெரிவித்தனர்.
பாஸ்ட்·புட் காலத்தில் மூன்று மணி நேரம் படம் ஓடினால் யார் உட்கார்ந்து பார்ப்பார்கள் என்ற முணுமுணுப்பை ரசிகர்களிடமும் நேற்று கேட்க முடிந்தது.
அரை மணி நேரம் கத்திரி போட்டால் படம் அம்சமாக இருக்கும் என்ற கருத்தை காதில் போட்டுக் கொள்வாரா மிஷ்கின்?