நாம் இருப்பது நமது முதல் பிறவியிலா? அல்லது கடைசிப் பிறவியிலா? மறுபிறவி என்று ஒன்று உண்டா? என்பது போன்ற சிக்கலான கேள்விகளை எழுப்புகிற படமாம் சரத்குமாரின் வைத்தீஸ்வரன்.
மனிதர்களுக்கு மறுபிறவி உண்டா இல்லையா என்பது தெரியாது. ஆனால், இத்தனை நாட்களாகப் பெட்டிக்குள் இருந்த வைத்தீஸ்வரன் திடீரென்று மறுபிறவி எடுத்துத்தான் செய்திகளில் அடிபடுகிறது.
மனநல மருத்துவராக இதில் நடித்துள்ளார் சரத்குமார். வில்லனாக சாயாஜி ஷிண்டே. படத்தை இயக்கியிருக்கும் வித்யாதரன் ஒரு மருத்துவர். அதுதான் இந்த மறுபிறவிக் கதை.