Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காதலர் தினத்தில் தொடங்கிய காதல் பொல்லாதது!

Advertiesment
காதலர் தினத்தில் தொடங்கிய காதல் பொல்லாதது!
, வெள்ளி, 15 பிப்ரவரி 2008 (19:08 IST)
காதலர் தினத்தன்று காதல் பொல்லாதது படத்தின் தொடக்க விழா நடந்தது. சுவாரஸ்யமாக ஏதாவது இருக்கும் என்று ஏவி.எம். ஆர்ஆர் திரையரங்குக்கு சென்றால், படத்தின் இயக்குனரும், அவரது நண்பர்களும் பெருமளவில் இருந்தனர்.

தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம. நாராயணன் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

காதல் பொல்லாதது படத்தின் தயாரிப்பாளர் கோட்டை குமார் படத்தை இயக்குவதுடன் முக்கியமான வேடம் ஒன்றிலும் நடிக்கிறார். 'மாமதுரை' படத்தை தயாரித்து அதில் வில்லனாக நடித்த முன் அனுபவத்தில் காதல் பொல்லாதது படத்தை தயாரித்து இயக்குவதாக கூறினார் கோட்டை குமார்.

படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்குகிறது. காதலர் தினத்தை தவறவிட வேண்டாமே என்று நடிகர்களை தேர்வு செய்யும் முன்பே பாடல் பதிவுடன் படத்தை தொடங்கியிருக்கிறார்கள். படத்திற்கு இசை சுனில். நடிகை மிதுனா, நடிகர் சரவணன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil