கரீனா கபூரும் அவரது முன்னாள் காதலர் ஷாஹித் கபூரும் கடைசியாக இணைந்து நடித்த படம் 'ஜப் வி மெட்'. படம் சூப்பர் ஹிட்!
இதன் தென்னிந்திய மொழிகளுக்கான ரீ-மேக் உரிமையை மோசர் பேர் நிறுவனம் வாங்கியிருக்கிறது. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் படத்தை தயாரிப்பது மோசர் பேரின் திட்டம்.
ஷாஹித் கபூர் வேடத்தில் நடிக்க முதலில் மாதவனை அணுகினர். கொஞ்ச நாளைக்கு காதலையும், மரத்தைச் சுற்றிப் பாடும் டூயட்டையும் விட்டுவிடுவதாக இருக்கிறேன் என்று மாதவன் பின் வாங்க அடுத்த சாய்ஸாக தனுஷ் கதவை தட்டியிருக்கிறது மோசர் பேர்.
கரீனா கபூர் வேடத்தில் நடிக்க த்ரிஷா ஆவலுடன் காத்திருக்கிறார். தனுஷ் சரியென்றால் நாயகன் பிரச்சனை முடிவுக்கு வரும். அடுத்து இயக்குனர். நல்ல இயக்குனராக தேடிக் கொண்டிருக்கிறது மோசர் பேர்.