நாற்பது நாடாளுமன்ற தொகுதிகளையும் கைப்பற்றும் முயற்சியுடன் வேறொரு முயற்சியிலும் விஜயகாந்த் மும்முரமாக உள்ளார். அது, சொந்தமாக சேனல் தொடங்குவது!
விஜயகாந்த் சம்பந்தப்பட்ட செய்திகள் முன்னணி தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்புவதில்லை. கலைஞர் டி.வி. உதயமான பிறகு, சன் டி.வி.யில் விஜயகாந்த் குறித்த செய்திகளுக்கு ஓரளவு முன்னுரிமை இருந்தது. அதனை சமத்துவ தலைவர் பறித்துக் கொண்டுவிட்டார்.
நாம் செய்யும் நல்ல விஷயங்களை நாலு பேர் தெரிந்துகொள்ள சொந்தமாக சேனல் அவசியம் என தொண்டர்கள் தொந்தரவு கொடுக்கிறார்கள். மீடியாவின் பலம் தெரிந்த விஜயகாந்தும் சேனல் தொடங்குவதற்கான வேலைகளில் கவனம் செலுத்துகிறார்.
முதலில் சேனலுக்கு ஆண்டார் அழகர் என தது பெற்றோர் பெயரை தேர்வு செய்திருந்தார் விஜயகாந்த். இப்போது சேனலுக்கு கேப்டன் என அவரது புனைப் பெயரையே வைப்பது என முடிவு செய்துள்ளனர்.
விரைவில் கேப்டன் டி.வி. பற்றிய அறிவிப்பு வெளிவரலாம்!