ஸ்ரேயாவுக்கு 24 மணி நேரம் போதவில்லை. ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என றெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கிறார்.
தமிழில் விக்ரமுடன் 'கந்தசாமி'யில் நடிப்பவர், அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார். இவை தவிர வேறு தமிழ்ப் படங்களுக்கு கால்ஷீட் கொடுக்கவில்லை ஸ்ரேயா. அதே நேரம், இரண்டு இந்திப் படங்களுக்கு புதிதாக கால்ஷீட் கொடுத்துள்ளார்.
ஸ்ரேயா இம்ரான் ஹஸ்மியுடன் நடித்த ஆவாராபான் சுமாராகவே போனது. எனினும் இந்திப் பட வாய்ப்புகளுக்கு குறைவில்லை. புதிதாக ஒப்பந்தமாகியிருக்கும் இரண்டு படங்களில் ஒன்று மிஷன் இஸ்தான்புல். Apoorva Lakhia இயக்குகிறார். இனனொரு படம் Ack.
இந்தியில் தொடர்ந்து வாய்ப்புகள் வருவதால் தெலுங்கில் நடிப்பதை ஸ்ரேயா சுத்தமாக தவிர்த்துவிட்டார். விரைவில் தமிழுக்கும் அவர் டாட்டா காட்டினால் ஆச்சரியமில்லை!