Publish Date: Wed, 13 Feb 2008 (18:15 IST)
Updated Date: Wed, 13 Feb 2008 (18:15 IST)
சத்யம் படத்தில் நடித்து வரும் விஷாலுக்காக கதை தயார் செய்து வைத்துள்ளார் இயக்குநர் மிஷ்கின். நான் இதுவரை இயக்கிய படங்களைவிட இது பிரம்மாண்டமாக இருக்கும் என்றார் மிஷ்கின்.
'மலைக்கோட்டை' படத்தை இயக்கிய ஜி.பூபதி பாண்டியனும் விஷாலுக்காக கதை ஒன்றைத் தயார் செய்துள்ளார். மிஷ்கின் படம் முடிந்ததும் விஷால் அனேகமாக பூபதி பாண்டியனின் படத்தில் நடிக்கலாம்.
பூபதி பாண்டியன் தனது படத்துக்கு 'வெடி' எனப் பெயர் வைத்துள்ளார். நமத்துப் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்!