பாக்யராஜ்- பூர்ணிமா தம்பதியின் மகள் சரண்யா பாக்யராஜ் தற்கொலைக்கு முயன்ற செய்தி சினிமா வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சரண்யா தற்கொலைக்கு முயலவில்லை. அவருக்கு மலர் மருத்துவமனையில் மனநல சிகிச்சை அளிப்பதாக வந்த செய்திகளில் உண்மையில்லை என்று பேட்டியளித்தார் பூர்ணிமா.
பிரச்சனை ஓரளவு தணிந்த நிலையில் குறிப்பிட்ட பத்திரிகை அலுவலகங்களுக்கு சரண்யாகவே போன் செய்து தன்னைப் பற்றி வந்த செய்தியை மறுத்துள்ளார்.
அத்துடன் கோயம்புத்தூரில் நடந்த இந்திய அளவிலான நாய் கண்காட்சியிலும் உற்சாகமாக கலந்து கொண்டார். நிகழ்ச்சின் சிறப்பு அழைப்பாளராக அல்ல, அழகான நாயின் சொந்தக்காரராக!
கண்காட்சிக்கு வந்த பலரும் பாரிஜாதம் நாயகியிடம் ஆட்டோ கிராஃப் வாங்கிக் கொண்டனர். சரண்யாவின் உற்சாகத்தைப் பார்த்த எவரும் தற்கொலை முயற்சியை நம்ப மாட்டார்கள். அந்தளவுக்கு புத்துணர்ச்சியுடன் காணப்பட்டார் சரண்யா.
பொது நிகழ்ச்சியில் தோன்றியதன் மூலம் தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பாக்யராஜின் மகள்.