ஷங்கர் இயக்கும் ரோபோவில் ஐஸ்வர்யா ராய்க்கு ஆறு கோடி சம்பளம் என்ற அதிரடி செய்து வந்து நான்கு நாள்கள் ஆகவில்லை. அதற்குள் இன்னொரு அதிர்ச்சி ரோபோ படத்திலிருந்து ஐஸ்வர்யா ராய் விலகுகிறார் என்பதே அது.
35 வயதிற்குள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என தனது நெருங்கிய தோழிகளிடம் கூறி வருகிறாராம் ஐஸ்வர்யா ராய். இந்த வரும் அவருக்கு 35 வயது ஆரம்பமாகிறது. அதனால் ஒப்புக் கொண்ட படங்களை விரைவாக முடித்து அம்மாவாகும் முடிவில் இருக்கிறாராம் இந்த முன்னாள் உலக அழகி.
ஷங்கர் ரோபோவுக்காக ஐஸ்வர்யா ராயிடம் தொடர்ச்சியாக பல மாதங்கள் கால்ஷீட் கேட்டிருக்கிறார். ஷங்கர் அலுவலக வட்டாரம், மாதங்கள் அல்ல இரண்டு வருடங்கள் என்கிறது.
தனது அம்மா ஆசைக்கு ரோபோ புராஜெக்ட் இடையூறாக இருக்கும் என்பதால் படத்திலிருந்து விலக தீர்மானித்துள்ளாராம் ஐஸ்வர்யா ராய், பெயர் சொல்ல விரும்பாக மும்பையின் மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் இந்தச் செய்தியை கசியவிட்டுள்ளார்.
ஆனாலும், ஐஸ்வர்யா ராயின் விலகல் முடிவு இன்னும் உறுதி செய்யப்படவில்லை.