Publish Date: Wed, 13 Feb 2008 (12:27 IST)
Updated Date: Wed, 13 Feb 2008 (12:27 IST)
சினிமாவில் ஒரு கால், அரசியலில் ஒரு கால் என அழகாக பேலன்ஸ் செய்கிறார் விஜயகாந்த். இருபெரும் திராவிடக் கட்சிகளை எதிர்த்துக் கொண்டே தனது 'அரசாங்கம்' படத்தையும் ஏறக்குறைய முடித்துவிட்டார்.
அடுத்து 'மீசை மாதவன்', 'சுந்தரா டிராவல்ஸ்' ஆகிய ரீ-மேக் படங்களை தயாரித்த யுவஸ்ரீ கிரியேஷன்ஸ் எஸ்.வி. தங்கராஜுக்கு படம் பண்ணுகிறார்.
தயாரித்த இரண்டு படங்களும் சரியாகப் போகாமல் நஷ்டத்தில் இருந்தார் தங்கராஜ். அவரது நண்பரான விஜயகாந்த் உதவி செய்யும் நோக்கத்தில் தங்கராஜுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார்.
'தை பொறந்தாச்சு', 'சூப்பர் குடும்பம்' படங்களின் இயக்குனர் ஆர்.கே. செல்வமணி படத்தை இயக்குகிறார்.