சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜி நாயகனாக அறிமுகமாகும் படம் சிங்கக்குட்டி. ஏ.வெங்கடேஷ் இயக்கியிருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், பாடல்கள் வாலி, எடிட்டிங் ஆண்டனி, வசனம் பட்டுக்கோட்டை பிரபாகர் என எல்லாமே ஜீனியஸ்.
சிங்கக்குட்டியைப் பார்த்த திருச்சி விநியோகஸ்தர் ஜின்னா, தனது ஜின்னா கிரியேஷன்ஸ் சார்பில் சிங்கக் குட்டியின் விநியோக உரிமையை பெரும் தொகைக்கு வாங்கியிருக்கிறார். உள்நாடு, வெளிநாடு என ஒட்டுமொத்த உரிமையையும் வாங்கி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் ஜின்னா.
விநியோகஸ்தராக இருப்பவர் விரைவில் தயாரிப்பாளராகும் வேலைகளும் நடந்து வருகின்றன. முதலில் ஹரி இயக்கத்தில் பரத் நடிக்கும் சேவல் படத்தை ஜின்னா தயாரிக்கிறார்.