'
தில்', 'மின்னலே', 'அலைபாயுதே', 'ரன்' என தொடர்ச்சியாக தமிழ்ப் படங்கள் இந்தியில் ரீ-மேக் செய்யப்படுகின்றன. ஏ.ஆர். முருகதாஸ் கஜினியை இந்தியில் கஜிரி என்ற பெயரில் அமீர் கானை வைத்து இயக்கிக் கொண்டிருக்கிறார்.
விரைவில் தனது இரு படங்களை இந்தியில் ரீ-மேக் செய்கிறார் செல்வராகவன். இந்த வரிசையில் ராதாமோகனின் மொழியும் இணைந்துள்ளது.
சென்ற வருடம் வெளியான மொழி தமிழ் ரசிகர்களை மட்டுமின்றி, கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு வந்த வெளிநாட்டவர்களையும் வெகுவாக கவர்ந்தது. 'அபியும் நானும்' படத்தை இயக்கிவரும் ராதாமோகன் அடுத்து மொழியை இந்தியில் ரீ-மேக் செய்கிறார்.
அதற்கான வேலைகளுக்காக மும்பை சென்றுள்ளனர். ராதாமோகன். ஜோதிகா நடித்த வேடத்தில் அநேகமாக வித்யா பாலன் நடிக்கலம் என்கிறார்கள்.