படம் தொடங்கும் முன்பும், முடிந்த பின்பும் திருப்பதி செல்வது ரஜினியின் வழக்கம். சூப்பர் ஸ்டாரின் இந்தப் பழக்கம் இளைய தலைமுறையிடமும் பரவி வருகிறது.
'பழனி' படம், பேரரசுவின் முந்தைய படங்களான 'திருப்பதி', 'தர்மபுரி'யை விட நன்றாகவே போய்க் கொண்டிருக்கிறது. படத்தைத் தயாரித்த ஷக்தி சிதம்பரத்திற்கும் பர்ஸில் கோடு எதுவும் விழவில்லை.
படம் வெற்றி பெற்றால் பழனி வருகிறோம் எனப் பழனி முருகனிடம் வேண்டியிருந்தார்கள். அதனை நிறைவேற்ற பரத், பேரரசு, ஷக்தி சிதம்பரம் மற்றும் பட யூனிட் என ஒரு பெரிய கும்பலாக நேற்று பழனி சென்று வேண்டுதலை நிறைவேற்றினர்.
சமீபத்தில் இப்படி வேண்டுதலை நிறைவேற்றிய வி.ஐ.பி., விக்ரம்! 'பீமா' வெற்றி பெற்றதற்காக திருப்பதி சென்று வேண்டுதலை நிறைவேற்றினார்