ராஜ்குமார் சந்தோஷி ஏறக்குறைய இருநூறு கோடி ரூபாய் செலவில் ராமாயணத்தை அதே பெயரில் படமாக்குகிறார். இதில் ராவணனாக நடிக்க ரஜினியிடம் கேட்டார் சந்தோஷி. சுற்றமும் நட்பும் கலந்தாலோசித்துப் பதில் சொல்வதாகக் சொன்ன ரஜினி, தனது இமேஜூக்கு கிட்ரைப் கேரக்டரெல்லாம் சரிவராது என மறுத்தார்.
இந்திர விழா தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த ராஜ்குமார் சந்தோஷி, ராவணனை மீண்டும் தூசி தட்டினார்.
ராவணனை நல்ல விதமாக அவனது பிளஸ்பாயிண்டுகளை மட்டுமே தனது படத்தில் சித்தரிக்கப் போவதாகச் சொன்னவர், ரஜினியும் இந்த வேடத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளார் என்றார்.
ரஜினி ரோபோவில் நடிக்கப் போகிறாரே என்ற கேள்விக்கு, அவசரமேயில்லை, நான் ராமாயணத்தை 2009ல் தான் தொடங்கப் போகிறேன் என்றார்.
ரஜினியை ராவணனாக்காமல் விடமாட்டார் போலிருக்கிறது!