கடைசியில் காதல் விஷாலையும் வெற்றி கொண்டு விட்டது. 'மலைக்கோட்டை'யில் விஷால்- ப்ரியாமணி நடித்தபோது, இருவரும் காதலிப்பதாக வதந்திகள் கிளம்பின. அதை ஒப்புக் கொள்வதுபோல் நேற்று முன்தினம் பேட்டியளித்தார் விஷால்.
எனது மனசுக்குள் ஒரு நடிகை நுழைந்து விட்டார். எனது ப்ரியம் அவருக்குத் தெரியும். ஆனாலும் என்னுடைய காதலை இன்னும் அவரிடம் கூறவில்லை என்றெல்லாம், தனது உள்ளத்தை ஓபன் செய்தார் விஷால்.
அவர் குறிப்பிடும் அந்த நடிகை ப்ரியாமணிதான் என்று பத்திரிகைகள் அவரை ரவுண்ட் கட்டின. பதறிப் போனவர், எல்லா நடிகைகளும் சொல்லும், எங்களுக்குள் இருப்பது தூய நட்புதான் என்று சொல்ல, பத்திரிகைகளுக்கு சுருதி இறங்கியது. விஷாலும், நான் காதலிக்கும் நடிகை ப்ரியாமணி இல்லை. அவர் தமிழ் நடிகையே இல்லை என்று கூற, சஸ்பென்ஸ் எகிறியது.
தமிழ் சினிமாவின் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலரை கிரீன் போல்டு செய்த அந்த நடிகை யார்?
'சத்யம்' படத்தில் விஷாலுடன் நடித்து வரும் நயன்தாராவுக்கே விஷால் சொல்லும் காதலியின் உருவம் ஒத்துக்போகிறது. எனினும் உறுதியான பதில் கிடைக்காமல் டென்ஷனில் நகம் கடித்துக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம்.