சென்ற மாத இறுதியில் மும்பையில் தொடங்கிய பிரெஞ்ச் திரைப்பட விழா டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களில் தொடர்ந்து நடைபெற்றது. சென்னையில் பிப்ரவரி 11ஆம் தேதி (திங்கள்) முதல் நான்கு நாட்களுக்கு பிரெஞ்ச் திரைப்பட விழா நடைபெறுகிறது.
சென்னை சத்யம் வளாகத்தில் நான்கு நாளில் ஏழு திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. பிரான்சின் கலாச்கார மையமான அல்லையன்ஸ் பிரான்சியேஸ் விழாவை ஒழுங்கு படுத்தியுள்ளது.
முதல் நாள் மாலை 7 மணிக்கு அனிமேஷன் படமான AZUR ET ASMAR திரைப்படப்படுகிறது. மீதி மூன்று நாட்களும் 7 மற்றும் 9.30 மணிக்கு தினம் இரு படங்கள் வீதம் திரையிடப்பட உள்ளன.
பிப்ரவரி 11ஆம் தேதி 7 மணிக்கு AZUR ET ASMAR
,, 12ஆம் தேதி 7 மணிக்கு CARAMEL
9 மணிக்கு CHRYSALIS
,, 13ஆம் தேதி 7 மணிக்கு LE CONCILE DE PIERRE
9.30 மணிக்கு LA SCIENLE DES REVES
,, 14ஆம் தேதி 7 மணிக்கு ROMAN DE GARE
9.30 மணிக்கு ILS