'மறுமலர்ச்சி' பாரதி இயக்கும் வள்ளுவன் வாசுகி படத்துக்காக கோனார் வீடு ஒன்றை உருவாக்கியிருக்கிறார் கலை இயக்குனர் ஆரோக்கியராஜ்.
படத்தில் இந்த வீடு பிரதான கதாபாத்திரமாக வருகிறது. கால்நடைகள் மேய்க்கும் கோனார்களின் வீட்டில் என்னென்ன இருக்குமோ அத்தனையும் இந்த வீட்டில் இடம்பெற்றுள்ளது.
இதுபற்றிக்கூறிய ஆரோக்கியராஜ், "கோனார் வீடுகளில் இருக்கிற தயிர் கடையிற மத்து, மூங்கிலில் செய்த பாய் முதற்கொண்டு ஆட்டுப் பட்டி, வைக்கோலில் கூரைனு எல்லாமே இந்த வீட்டில் உண்டு. வள்ளுவன் வாசுகி இரண்டு தலைமுறைக் கதை. அதனால், இந்த வீட்டை பழசாகவும், புதுசாகவும் இரண்டு விதமாகவும் காட்டியிருக்கிறோம்" என்றார்.
இதுதவிர கொள்ளிடம் ஆற்றங்கரையில், ஆற்று நடுவில் இருக்கும் தண்ணீர் தொட்டியைச் சுற்றி வீடு ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதற்காகக் பல லாரி மணலைப் பயன்படுத்தியதாகக் கூறினார் ஆரோக்கியராஜ்.