கெட்டப் போடாமல் விவேக்கிற்கு இப்போதெல்லாம் காமெடியே வராது போலிருக்கிறது. ஷக்தி சிதம்பரம் இயக்கும் 'சண்ட' படத்தில் நாட்டாமை, நாட்டாமை மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.
ராஜேஷ்வரின் இந்திர விழாவிலும் இரண்டு வேடங்கள். இதிலும் கெட்டப் உண்டு. வக்கீலாக வரும் விவேக், கெளரவம் சிவாஜி கெட்டப்பில் கண்ணா நீயும் நானுமா என்று பாடுகிறார். இதிலும் அப்பா மகன் என்று அதே சண்ட ·பார்முலா.
கே.எஸ். அதியமானின் 'தூண்டில்' படத்திலும் அண்ணாமலை ரஜினி, நாட்டாமை சரத் கெட்டப்புகளில் வருகிறார்.
சினிமாவை வைத்தே சினிமாவில் காமெடி செய்யும் விவேக்கின் கெட்டப் ஃபார்முலா சினிமா காமெடியாக இல்லாமல் சின்னத்திரை லொள்ளு சபாவாகி வருகிறது.
சின்னக் கலைவாணர் சிந்திப்பாரா?