விபத்தில் ஒரு காலை இழநூத பிறகும் செயற்கை கால் பொருத்தி நாட்டியத்தில் பல சாதனைகள் புரிந்தவர் சுதா சந்திரன். 'மயூரி' திரைப்படம் இவரது பெருமைக்குரிய படங்களில் ஒன்று.
இந்தி தனியார் தொலைக்காட்சிகளில் நடித்து வந்த சுதா சந்திரன், விஷாலின் சத்யம் படத்தில் நடிக்கிறார். பல ஆண்டுகளாக அவர் தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சத்யம் படத்தில் நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் (பாடல்கள் நீங்கலாக) அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டன. சண்டைக் காட்சி ஒன்றை படமாக்க விரைவில் விஷால் மலேசியா செல்கிறார்.
விரைவில் படத்தின் பாடல்கள் வெளியிடப்பட உள்ளது.