Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் குணால் தற்கொலை!

Advertiesment
நடிகர் குணால் தற்கொலை!
, வியாழன், 7 பிப்ரவரி 2008 (13:55 IST)
நடிகர் குணால் மும்பையில் உள்ள அவரது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

webdunia photoFILE
'தில் ஹி தில் மெயின்' என்ற இந்தி படத்திலும், தமிழில் 'காதலர் தினம்' படத்திலும் சோனாலி பிந்த்ரேயுடன் நடித்த குணால் சிங், இளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். மேலும் தமிழில் 'புன்னகை தேசம்', 'பார்வை ஒன்றே போதுமே' உட்பட தென் மாநில படங்களிலும் நடித்துள்ளார்.

இன்று அதிகாலை 1.30 மணிக்கு மும்பை ஓசிஹிவாரா பகுதியில் உள்ள தனது வீட்டில் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று காவல் துறையினர் கூறியுள்ளனர். அவரது உடலை பிரேத பரிசோதனை செயத பிறகே தற்கொலைக்கான காரணம் குறித்து தெரியவரும் என்று காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

நடிகை லாவண்யாவுடன் குணால் வாழ்ந்து வந்ததாகவும், அவரையே மணந்து கொள்ள இருந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன. குணாலின் மறைவிற்கு தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil