பாப் இசையின் தாக்கத்தால் இளைய தலைமுறையினர் துள்ளல் இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்று கூறும் ஏ.ஆர். ரஹ்மான், வெஸ்டர்ன் கிளாஸிகல் இசையை அனைவரிடத்திலும் எடுத்துச் செல்லும் வகையில் இசைப் பள்ளி ஒன்றை ஆரம்பிக்கப் போவதாக சில வாரங்கள் முன்பு அறிவித்தார்.
வாய்ப்பாட்டு முதல் இசையின் நவீன தொழில்நுட்பம் வரை கற்றுத் கற்றுத் தரப்படும் இப்பள்ளிக்காக நிலம் தேர்வு செய்யும் வேலை துரிதமாக நடந்து வந்தது.
சென்னை விமான நிலையத்துக்கு அருகே இசைப் பள்ளிக்கான நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு உருவாக இருக்கும் பள்ளியில் படித்து முடிப்பவர்களுக்கு பட்டமும், ரஹ்மானின் இசைக் குழுவில் பங்கேற்கும் வாய்ப்பும் வழங்கப்படும்.