Publish Date: Wed, 06 Feb 2008 (14:36 IST)
Updated Date: Wed, 06 Feb 2008 (14:36 IST)
சிவாஜி கணேசன் நடித்த 'புதிய பறவை' படத்தை ரீ-மேக் செய்கிறது ராம்குமார், பிரபுவின் சிவாஜி ஃபிலிம்ஸ்.
கதைக்காகவும், பாடல்களுக்காகவும், திருப்பங்கள் நிறைந்த திரைக்கதைக்காகவும் இன்றும் வியந்து பார்க்கப்படுகிற படம் 'புதிய பறவை'
இதில் எம்.ஆர். ராதா நடித்த மலேசிய போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிப்பது என பிரபு தீர்மானித்துள்ளார். சிவாஜியின் வேடத்தில் நடிக்க பிரபுவின் சாய்ஸ் அஜித். அதற்காக அஜித்திடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
'பில்லா' மேக்கிங்கில் அசந்துபோன பிரபுவும், ராம்குமாரும் விஷ்ணுவர்தனை எப்படியும் 'புதிய பறவை' ரீ-மேக்கை இயக்க வைப்பது என முடிவு செய்துள்ளனர்.
ரீ-மேக்கிற்கான வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.