Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹீரோ தேடும் மோசர் பேர் நிறுவனம்!

Advertiesment
ஹீரோ தேடும் மோசர் பேர் நிறுவனம்!
, புதன், 6 பிப்ரவரி 2008 (14:34 IST)
'வெள்ளித்திரை' மூலம் தயாரிப்பில் இறங்கியிருக்கும் மோசர் பேர் நிறுவனம் இந்தியில் ஷாஹித் கபூர், கரீனா கபூர் நடித்த 'Jab we Met' படத்தை தமிழில் ரீ-மேக் செய்ய இருக்கிறது.

இதில் நடிக்க கார்த்தி, மாதவன் என பலரை அணுகியும் இதுவரை யாரும் நல்ல பதில் சொல்லவில்லை. இறுதியாக தனுஷிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது.

ஹீரோயினாக த்ரிஷா நடிக்க வேண்டும் என்பது மோசர் பேரின் விருப்பம். 'குருவி', 'அபியும் நானும்', 'சென்னையில் ஒரு மழைக்காலம்' படங்களில் நடித்து வருகிறவர் புதிதாக 'சர்வம்' படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

அதனால் மோசர் பேரின் விருப்பம் நிறைவேறுமா என்பது தெரியவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil